புதிய தென்றல்

Monday, August 27, 2007

மத ஒற்றுமையை வலியுறுத்தி வைகோ உண்ணாவிரதம்

மத ஒற்றுமையை வலியுறுத்தி ம.தி.மு.க. பொது செயலாளர் புரட்சி புயல் வைகோ தலைமையில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.



தினமலர் செய்தி

"அரசியல் லாபமோ, ஓட்டுக்காகவோ அல்ல' நெல்லை உண்ணாவிரதத்தில் வைகோ பேச்சு

திருநெல்வேலி: "உண்ணாவிரதம் இருப்பது நோக்கம் ஓட்டு வாங்குவதற்காகவோ, அரசியல் லாபத்திற்காகவோ அல்ல' என நெல்லையில் வைகோ பேசினார்.

தென்காசியில் கடந்த 14ம் தேதி இரு தரப்பினர் மோதியதில் 6 பேர் கொலை செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து ஜாதி ரீதியாகவும் மற்ற காரணங்களாலும் நெல்லை மாவட்டத்தில்மேலும் சிலர் கொலை செய்யப்பட்டகள். எனவே சமய, சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி ம.தி.மு.க.,பொதுச்செயலாளர் வைகோ நெல்லையில் நேற்று உண்ணாவிரதம் மேற்கொண்டார். வண்ணார்பேட்டை பைபாஸ் ரோட்டில் நடந்த உண்ணாவிரதத்தை முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் துவக்கிவைத்தார். ம.தி.மு.க.,துணைப்பொதுச்செயலாளர்கள் நாசரேத்துரை, மல்லைசத்யா, தலைமை நிலைய செயலர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், மாவட்ட செயலாளர்கள் நிஜாம், சரவணன், ஜோயல், சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் ஞானதாஸ், வரதராஜன், சதன்திருமலைக்குமார், வீர இளவசரன், கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில்சம்பத், எழுத்தாளர்கள் பொன்னீலன், தி.க.சிவசங்கரன், உள்ளிட்டோர் பங்கேற்றனர். வைகோவின் தாயார் மாரியம்மாளும் ண்ணாவிரதத்தில் கலந்து கொண்டார்.

உண்ணாவிரதம் நிறைவாக, பெருங்குளம் செங்கோல் ஆதீனம் கல்யாணசுந்தரம் அடிகள், பாளை மறை மாவட்ட கத்தோலிக்க முதன்மை குரு அந்தோணிசாமி அடிகள், சி.எஸ்.ஐ.,பாதிரியார் வேதநாயகம்அடிகள், மவுலவி அகமதுகபீர்ஆலிம் உள்ளிட்டவர்கள் வைகோவிற்கு பழச்சாறு கொடுத்து முடித்து வைத்தனர்.

உண்ணாவிரதத்தில் வைகோ பேசியதாவது: இந்த உண்ணாவிரதம் யாரையும் விமர்சிக்கும் எண்ணத்துடனோ, குற்றச்சாட்டுக்களை கூறுவதற்காவோ, ஓட்டுக்காகவோ மேற்கொள்ளவில்லை. அரசியல் லாப நோக்கம் கடுகளவும் இல்லை. கடந்த 1990 களில் மதமோதல்கள் நடந்த போதும், 1996ல் நெல்லை மாவட்டத்தில் ஜாதிமோதல்கள் நடந்தபோதும் இங்கு ஊர் ஊராக வந்து இருதரப்பையும் சந்தித்து பேசியுள்ளேன். 2005ல் நெல்லையில் இருந்து சென்னைக்கு ஆயிரத்து 200 கி.மீ.,துõரம் நடைபயணம் சென்றதும் சமூக, சமய நல்லிணக்கத்தை வலியுறுத்திதான்.

எந்த மதத்தினராக இருந்தாலும் சரி, இளைஞர்கள் தீவிரவாதத்தை துõண்டக்கூடாது. வன்முறையை நாடக்கூடாது. இத்தகைய வன்முறையில் செல்வோரை தடுக்க வேண்டிய கடமை உள்ளது. ஆயுதம் ஏந்தி வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுத்து தடுக்க வேண்டும் இவ்வாறு வைகோ பேசினார்.



தட்ஸ் தமிழ் செய்தி


மத நல்லிணக்கத்திற்காக வைகோ உண்ணாவிரதம்

ஆகஸ்ட் 26, 2007 RSS

திருநெல்வேலி: மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று நெல்லையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.

Vaiko

நெல்லை மாவட்டம் தென்காசியில் கடந்த 14-ந் தேதி 6 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து அறிக்கை விட்டு வைகோ, இதுபோன்ற வன்முறைச் சம்பவங்களால் இளம் சிறார்களின் மனதில் பழிவாங்கும் உணர்ச்சிகள் அதிகரிக்கும். இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் இனியும் நடைபெறாமல் இருக்க, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி தென்காசியில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தார்.

பின்னர் இது நெல்லைக்கு மாற்றப்பட்டது. அதன்படி இன்று காலை நெல்லை பி.எஸ்.என்.எல். தலைமை அலுவலகம் எதிரே வைகோ உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.

மதிமுக எம்.பி. சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், எம்.எல்.ஏக்கள் சதன் திருமலைக்குமார், வரதராஜன், ஞானதாஸ், மதிமுக பிரமுகர்கள் நாசரேத் துரை, மல்லை சத்யா உள்ளிட்ட மதிமுகவினர் பெரும் திரளாக இதில் பங்கேற்றுள்ளனர்.

உண்ணாவிரதத்தை முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் தொடங்கி வைத்தார். அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் நைனார் நாகேந்திரன், மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹென்றி டிபேன், இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ சமுதாயங்களைச் சேர்ந்த பெரும் திரளானோரும் இந்த உண்ணாவிரத்தில் பங்கேற்றுள்ளனர்.

தமிழ் சான்றோர் பேரவையைச் சேர்ந்தவர்களும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.