புதிய தென்றல்

Monday, August 27, 2007

மத ஒற்றுமையை வலியுறுத்தி வைகோ உண்ணாவிரதம்

மத ஒற்றுமையை வலியுறுத்தி ம.தி.மு.க. பொது செயலாளர் புரட்சி புயல் வைகோ தலைமையில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.



தினமலர் செய்தி

"அரசியல் லாபமோ, ஓட்டுக்காகவோ அல்ல' நெல்லை உண்ணாவிரதத்தில் வைகோ பேச்சு

திருநெல்வேலி: "உண்ணாவிரதம் இருப்பது நோக்கம் ஓட்டு வாங்குவதற்காகவோ, அரசியல் லாபத்திற்காகவோ அல்ல' என நெல்லையில் வைகோ பேசினார்.

தென்காசியில் கடந்த 14ம் தேதி இரு தரப்பினர் மோதியதில் 6 பேர் கொலை செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து ஜாதி ரீதியாகவும் மற்ற காரணங்களாலும் நெல்லை மாவட்டத்தில்மேலும் சிலர் கொலை செய்யப்பட்டகள். எனவே சமய, சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி ம.தி.மு.க.,பொதுச்செயலாளர் வைகோ நெல்லையில் நேற்று உண்ணாவிரதம் மேற்கொண்டார். வண்ணார்பேட்டை பைபாஸ் ரோட்டில் நடந்த உண்ணாவிரதத்தை முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் துவக்கிவைத்தார். ம.தி.மு.க.,துணைப்பொதுச்செயலாளர்கள் நாசரேத்துரை, மல்லைசத்யா, தலைமை நிலைய செயலர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், மாவட்ட செயலாளர்கள் நிஜாம், சரவணன், ஜோயல், சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் ஞானதாஸ், வரதராஜன், சதன்திருமலைக்குமார், வீர இளவசரன், கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில்சம்பத், எழுத்தாளர்கள் பொன்னீலன், தி.க.சிவசங்கரன், உள்ளிட்டோர் பங்கேற்றனர். வைகோவின் தாயார் மாரியம்மாளும் ண்ணாவிரதத்தில் கலந்து கொண்டார்.

உண்ணாவிரதம் நிறைவாக, பெருங்குளம் செங்கோல் ஆதீனம் கல்யாணசுந்தரம் அடிகள், பாளை மறை மாவட்ட கத்தோலிக்க முதன்மை குரு அந்தோணிசாமி அடிகள், சி.எஸ்.ஐ.,பாதிரியார் வேதநாயகம்அடிகள், மவுலவி அகமதுகபீர்ஆலிம் உள்ளிட்டவர்கள் வைகோவிற்கு பழச்சாறு கொடுத்து முடித்து வைத்தனர்.

உண்ணாவிரதத்தில் வைகோ பேசியதாவது: இந்த உண்ணாவிரதம் யாரையும் விமர்சிக்கும் எண்ணத்துடனோ, குற்றச்சாட்டுக்களை கூறுவதற்காவோ, ஓட்டுக்காகவோ மேற்கொள்ளவில்லை. அரசியல் லாப நோக்கம் கடுகளவும் இல்லை. கடந்த 1990 களில் மதமோதல்கள் நடந்த போதும், 1996ல் நெல்லை மாவட்டத்தில் ஜாதிமோதல்கள் நடந்தபோதும் இங்கு ஊர் ஊராக வந்து இருதரப்பையும் சந்தித்து பேசியுள்ளேன். 2005ல் நெல்லையில் இருந்து சென்னைக்கு ஆயிரத்து 200 கி.மீ.,துõரம் நடைபயணம் சென்றதும் சமூக, சமய நல்லிணக்கத்தை வலியுறுத்திதான்.

எந்த மதத்தினராக இருந்தாலும் சரி, இளைஞர்கள் தீவிரவாதத்தை துõண்டக்கூடாது. வன்முறையை நாடக்கூடாது. இத்தகைய வன்முறையில் செல்வோரை தடுக்க வேண்டிய கடமை உள்ளது. ஆயுதம் ஏந்தி வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுத்து தடுக்க வேண்டும் இவ்வாறு வைகோ பேசினார்.



தட்ஸ் தமிழ் செய்தி


மத நல்லிணக்கத்திற்காக வைகோ உண்ணாவிரதம்

ஆகஸ்ட் 26, 2007 RSS

திருநெல்வேலி: மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று நெல்லையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.

Vaiko

நெல்லை மாவட்டம் தென்காசியில் கடந்த 14-ந் தேதி 6 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து அறிக்கை விட்டு வைகோ, இதுபோன்ற வன்முறைச் சம்பவங்களால் இளம் சிறார்களின் மனதில் பழிவாங்கும் உணர்ச்சிகள் அதிகரிக்கும். இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் இனியும் நடைபெறாமல் இருக்க, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி தென்காசியில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தார்.

பின்னர் இது நெல்லைக்கு மாற்றப்பட்டது. அதன்படி இன்று காலை நெல்லை பி.எஸ்.என்.எல். தலைமை அலுவலகம் எதிரே வைகோ உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.

மதிமுக எம்.பி. சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், எம்.எல்.ஏக்கள் சதன் திருமலைக்குமார், வரதராஜன், ஞானதாஸ், மதிமுக பிரமுகர்கள் நாசரேத் துரை, மல்லை சத்யா உள்ளிட்ட மதிமுகவினர் பெரும் திரளாக இதில் பங்கேற்றுள்ளனர்.

உண்ணாவிரதத்தை முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் தொடங்கி வைத்தார். அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் நைனார் நாகேந்திரன், மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹென்றி டிபேன், இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ சமுதாயங்களைச் சேர்ந்த பெரும் திரளானோரும் இந்த உண்ணாவிரத்தில் பங்கேற்றுள்ளனர்.

தமிழ் சான்றோர் பேரவையைச் சேர்ந்தவர்களும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.



Monday, July 02, 2007

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை 'கெசட்'டில் வெளியிட விழுப்புரம் ம.தி.மு.க., மண்டல மாநாட்டில் வலியுறுத்தல்




விழுப்புரம் : 'காவிரி நடுவர் நீதிமன்ற இறுதி தீர்ப்பை அரசு இதழில் வெளியிட வேண்டும்' என்பன உள்ளிட்ட 24 தீர்மானங்கள் விழுப்புரத்தில் நடந்த ம.தி.மு.க., மண்டல மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.




விழுப்புரம் சென்னை தேசிய நெடுஞ்சாலை முத்தாம்பாளையத்தில் ம.தி.மு.க., மண்டல மாநாடு நேற்று காலை துவங்கியது. பொதுச் செயலர் வைகோ உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:


மத்தியில் கடந்த 10 ஆண்டுகளாக மாநில கட்சிகளின் ஆதரவுடன் அரசு இயங்கி வருகிறது. மக்களின் தனித்தன்மையை பாதுகாக்க காங்கிரஸ் தவறி விட்டது. காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசு இதழில் வெளியிட வேண்டும். காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணைகட்டும் திட்டத்தை தடை செய்ய வேண்டும். முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர்த்துவது குறித்த சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பைச் செயல்படுத்த வேண்டும். பாலாற்றின் குறுக்கே அணை கட்டினால் வட தமிழகம் பாலை வனமாகும். அந்த அபாயத்தை தடுக்க வேண்டும். நதிநீர் வாரியம் அமைக்க வேண்டும்.
இலங்கை அரசுக்கு ஆயுத உதவி செய்யக் கூடாது. ஈழத் தமிழர்களுக்கு செஞ்சிலுவைச் சங்கம் மூலம் உணவு, மருந்துப் பொருட்களை அனுப்ப அனுமதி தர வேண்டும். சில்லரை வணிகத்தில் அயல்நாட்டு முதலீட்டை தடை செய்ய வேண்டும். சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்க விவசாய விளை நிலங்களை கையகப்படுத்தக் கூடாது. இணையதள வணிகத்தை தடை செய்ய வேண்டும். மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்த வேண்டும். தமிழக மீனவர்களின் படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டும். கரும்பு விவசாயிகளின் நலனை காக்க வேண்டும். சென்னை - விழுப்புரம் இடையே மின்சார ரயில் இயக்க வேண்டும். சென்னை - தூத்துக்குடி இடையே இரட்டை ரயில்பாதை அமைக்க வேண்டும்.


அமெரிக்க அணுசக்தி போர் கப்பல் சென்னை வருவதை அனுமதிக்க கூடாது. கரும்புக்கான விலையை டன் ஒன்றுக்கு ரூ.இரண்டாயிரம் என்று நிர்ணயம் செய்ய வேண்டும். குறுவை சாகுபடிக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் உள்ளிட்ட 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



மலர் வெளியீடு: மாநாட்டின் முற்பகல் நிகழ்ச்சி 12.55 மணிக்கு நிறைவு பெற்றது. அப்போது, மாநாட்டு மலர் வெளியிடப்பட்டது. மாநாட்டு மலரை திருவண்ணாமலை மாவட்ட செயலர் ஆரணி ராஜா வெளியிட்டார். கலைப்புலி தாணு பெற்றுக் கொண்டார்.



தூத்துக்குடி செயற்குழு உறுப்பினர் காயாம்பு எழுதிய, 'முதுமை ஒரு சுவையே' என்ற நூலை வைகோ வெளியிட ஆரணி ராஜா பெற்றுக் கொண்டார். செல்லூர் தயாநிதி நூலை தமிழ்மறவன் வெளியிட பாலவாக்கம் சோமு பெற்றுக் கொண்டார். விநாயகா ரமேஷ் தயார் செய்த, 'சங்கொலி' தொகுப்பை தென்சென்னை மாவட்ட செயலர் வேளச்சேரி மணிமாறன் வெளியிட செங்கை மாவட்ட செயலர் செங்குட்டுவன் பெற்றுக் கொண்டார். மாநாட்டில், 'தாயகம் மறுமலர்ச்சி காண அவசரத் தேவை அரசியல் மாற்றமா? சமுதாய மாற்றமா? என்ற தலைப்பில் நாஞ்சில் சம்பத்தை நடுவராக கொண்ட பட்டிமன்றம் நடந்தது.




செய்தி: தினமலர்

Friday, March 16, 2007

கோவையில் இன்று ம.தி.மு.க. மாநாடு

பல தடைகளை மீறி புரட்சி புயல் தலைமையில் கோவை நகரில் இன்று நடக்கும் மாநாடு, சிறப்பான வெற்றி பெற் வாழ்த்துக்கள்.

Tuesday, January 30, 2007

வருமான வரி கணக்கில் முரண்பாடு - ஒத்து கொண்டார் விஜயகாந்த்

தனது வருமான வரி கனக்கில் முரண்பாடு உள்ளதை, உணர்சி வச பட்டு ஒத்துக் கொண்டார், தே.மு.தி.க. தலைவரும், சினிமா (நகைசுவை) நடிகருமான விஜயகாந்த்.

நேற்று நடந்த ஒரு திருமண விழாவில் மிக ஆவேசமாக பேசிய வசனத்தில் சில துளிகள்
:

* "எனது வருமான வரிக்கணக்கில் மாறுபாடு இருக்கிறது என்கின்றனர். இந்தியா முழுவதும் உள்ள எம்.எல்.ஏ.க்களின் வீட்டில் வருமான வரி சோதனை நடத்த அதிகாரிகள் தயாரா?"
-- நாட்டுல எத்தன எம்.எல்.ஏ.க்கள் ஊழல் பண்றாங்க. நானும் எம்.எல்.ஏ. வா இருக்கும் போதே சுருட்ட விடமாட்டேங்கிறாங்களே??? என்ன மட்டும் புடிச்சிடீங்களே? மத்தவங்களையும் புடிங்க!!!

* "ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்கு பின், உலக சரித்திரத்தில் முதன் முறையாக தே.மு.தி.க. அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடத்தியுள்ளனர்"
-- எவ்வளவு கஷ்ட பட்டு, உலகத்துல இருக்குற எல்லா நாட்டு வருமான துறை அதிகாரிங்க எங்க எங்க எல்லாம் சோதனை நடத்தி இருக்காங்கனு, புள்ளி விவரம் எல்லாம் எடுத்து, ரொம்ப பத்திரமா இருக்கடும்னு கட்சி அலுவலகத்துலயே மறச்சி வெச்சா, இங்கயும் வந்து சோதனை நடத்திட்டாங்களே?? கட்சி அலுவலகத்துல தான் நான், ஊழல் பன்ன விவரம் எல்லாம் நான் வெச்சிருப்பேன்'னு கலைஞர தவிர வேர யாராலும் யோசிக்க முடியாது. அதனால...???

* "பழிவாங்கும் அரசியல் செய்து எனக்கு பழக்கம் இல்லை. ஆனால், திமுகவின் நடவடிக்கை, நாளைக்கு நான் ஆட்சியில் உட்கார்ந்தாள் பழிவாங்கும் எண்ணத்தை தூண்டும் விதமாக உள்ளது."

-- இதனால், நான் சொல்லி கொள்வது என்னவென்றால், இவர்களை பழிவாங்குவேன், பழிவாங்குவதை தவிர வேரெதுவும் செய்ய மாட்டேன்... இதுவரைக்கும் எனக்கு பழிவாங்கும் பழக்கம் எப்படி இல்லாம போச்சி? அடடா, 'மூனு வயசு பையன், அப்பாவ பாத்து, என் அனுபவத்துல இப்படி ஒரு படத்த பார்த்ததே இல்லனு'பாராட்டுர மாதிரி பேசிட்டனோ! நான் அரசியல மொலச்சே மூனு எல விடல...

* "பழி வாங்கும் அரசியலால், உங்கள் சந்ததிகள் தான் பாதிக்க படுவர்"
-- இன்னிகு நீ(கலைஞர்) பண்ணுரதுக்கு எல்லம், நாளைக்கு உன் புள்ளையயும், பேரனையும் தான் நான் பழிவாங்குவேன், அதனால, (னாம இப்பவே ஒரு டீல் போட்டுக்கலாம்)

* "தற்போது செயல் படுத்த படும் நலப்பணித்திட்டங்கள் அடிதட்டு மக்களுக்கு போய் சென்றடையவில்லை"
-- அதானல தான் நானே அடிசிட்டேன்


ஒரு எம்.எல்.ஏ. பதவியை பிடித்த உடனேயே, அடுத்து ஆட்சிக்கு வந்தால் உங்களையும், உங்கள் சந்ததிகளையும், பழிவாங்குவேன். நான் மட்டுமா, வரி ஏப்பு செய்தேன், எல்லா அரசியல்வாதிகளும் தான் செய்கிறார்கள், என கூறுபவர் எப்படி சுத்தமான, நேர்மையான, ஊழலற்ற ஆட்சியை தருவார்?

திரையுலக மாயையை விட்டு தமிழர்கள் வெளிவர வேண்டும்.

திரையுலகை எதிர்த்த பெரியாரின் பெயரையும் திராவிட என்ற சொல்லையும், பயன் படுத்து ஆட்சி செய்யும் கட்சிகள் அனைத்தும் (ம.தி.மு.க) தவிர திரையுலகத்தினரையே தலைவராகவும், திரையுலகத்தினரையே கடவுளாகவும் பார்க்கும் இன்றைய நிலையை, பெரியாரின் ஆவி கூட இன்றிருந்தால் துக்கம் அடைந்திருக்கும்.

Monday, January 15, 2007

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

ஜாதி, மத வேற்றுமை உணர்வுகள் மறைந்து, சகோதரத்துவமும், மனிதநேயமும் வளர்த்து, தமிழக மக்கள் நல்வாழ்வு பெறவும், இலங்கை தமிழர்கள் இன்னல் நீங்கி அவர்களுக்கு உரிமை வாழ்வும், விடியலும் மலரவும் தைப்பொங்கல் அமைந்திட வாழ்த்துக்கள்.

-- ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ:

Wednesday, January 10, 2007

கூடியது வைகோவின் மதிமுக பொதுக்குழு

சென்னை: பரபரப்பான சூழலில் மதிமுக பொதுக்குழுக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது.

வைகோவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய அவைத் தலைவர் எல்.கணேசன், துணைப் பொதுச் செயலாளர் செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் சேலத்தில் போட்டி மதிமுக பொதுக் குழுவைக் கூட்டி வைகோவை கட்சியை விட்டு நீக்கினர்.

இந் நிலையில் வைகோ தலைமையிலான மதிமுக பொதுக்குழுக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது. அண்ணா நகரில் உள்ள விஜஸ்ரிமஹால் கல்யாண மண்டபத்தில் நடக்கும் இக் கூட்டத்துக்கு வைகோ தலைமை தாங்குகிறார்.

மதிமுக பொதுக் குழுவில் 1,530 உறுப்பினர்கள் இருந்தனர். இவர்களில் கட்சி விரோத நடவடிக்கையால் நீக்கப்பட்டவர்கள் போக மொத்தம் 1,406 பேர் உள்ளனர். அவர்களில் 1,300க்கும் மேற்பட்டோர் தங்கள் பக்கம் உள்ளதாக வைகோ தரப்பு கூறுகிறது.

இன்றைய கூட்டத்தில் எல்.கணேசன், செஞ்சி மீது மேலும் கடுமையான நடவடிக்கைகள் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. புதிய அவைத் தலைவராக பொருளாளர் கண்ணப்பன் தேர்ந்தெடுக்கப்படலாம். வைகோவின் வலதுகரமான மதிமுகவின் கொள்கை விளக்க அணியின் செயலாளர் நாஞ்சில் சம்பத்துக்கு முக்கியப் பொறுப்பு கிடைக்கும் எனத் தெரிகிறது.

பொதுக் குழுக் கூட்டத்தை சீர்குலைக்க எல்.கணேசன் தரப்பும், திமுகவும் முயல்வதாக வைகோ குற்றம் சாட்டியுள்ள நிலையில் பெரும் பரபரப்பு பிளஸ் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்றைய மதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடக்கிறது.

இக் கூட்டத்தில் பங்கேற்க நேற்று மாலை முதலே மதிமுக பொதுக் குழு உறுப்பினர்களும், நிர்வாகிகளும் கட்சியின் தலைமையகத்திலும் கல்யாண மண்டபத்திலும் கூடிவிட்டனர்.

நேற்று இரவு முழுவதும் மதிமுக தொண்டரணியினர் கல்யாண மண்டபத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்று காலை முன்னதாகவே கல்யாண மண்டபத்துக்கு வந்துவிட்ட வைகோ ஏற்பாடுகளை பார்வையிட்டார்.

பொதுக் குழு உறுப்பினர்கள் தவிர வேறு யாரையும் மண்டபத்துக்குள் விட வேண்டாம் என தொண்டரணியினருக்கு உத்தரவிட்டார். மண்டபத்தில் வெளியே ஏராளமான தொண்டர்கள் குவிந்துள்ளனர்.


நன்றி: thatstamil

Saturday, January 06, 2007

ஈழ தமிழர் பாதுகாப்பு பேரணி - ஒளிபதிவு

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், 1ம் தேதி, ம.தி.மு.க. சார்பில், வைகோ தலைமையில் ஈழ தமிழர் பாதுகாப்பு பேரணி நடந்தது. இந்த பேரணி பற்றிய செய்தியை இங்கே காணவும்.

http://pudhiyathenral.blogspot.com/2006/09/blog-post_10.html

இந்த பேரணியில் கலந்து கொண்டு வைகோ, மற்றும் பழ.நெடுமாறன் அவர்களின் பேச்சு ஒளிபதிவு.