Tuesday, January 02, 2007

திமுகவில் கோஷ்டி பூசல், வன்முறை

திமுகவில் கோஷ்டி பூசல் காரணமாக, பெறும் வன்முறை அரங்கேறியது. இதனால் பொது மக்கள் பெறும் அவதிக்குள்ளானார்கள். தமிழக காவல்துறையோ ஆளும் கட்சியின் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் கைகள் கட்டபட்ட நிலைக்கு ஆளானார்கள்.

காங்கிரஸ், பா.ம.க, தே.மு.தி.க. கட்சிகளில் நடக்கும் கோஷ்டி பூசல்களில் வெறும் வேஷ்டி மட்டும் தான் கிழியும், தி.மு.க.வில் கார் எரிப்பது வரை நடந்தது, அதை தடுக்க முடியாமல் காவலரின் கைகள் கட்ட பட்டது, இதை கண்டித்தோ, மன்னிப்பு வேண்டியோ அறிக்கை கூட விடாமல் இருப்பதை நாமாவது கண்டிப்போம்.


தே.மு.தி.க.வில் சில நாட்கள் முன் நடந்த கோஷ்டி பூசல் பற்றிய எனது பதிவையும் இங்கே காணவும்.


------
தி.மு.க வன்முறை பற்றி, thatstamil.com தளத்தில் வெளியான செய்தி:

திமுக பைட்-வேட்டி 'கிழியல்', கார் 'எரியல்'
ஜனவரி 02, 2007

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் திமுகவினர் இடையே பயங்கர அடிதடி, மோதல் ஏற்பட்டது.

இதில் நகரச் செயலாளர் மண்டை உடைக்கப்பட்டு, அவரது கார் தீ வைத்து எரிக்கப்பட்டது.

திருவண்ணாமலையில் அமைச்சர் செ.ம.வேலு, முன்னாள் அமைச்சர் கு.பிச்சாண்டி ஆகியோர் தனித்தனி கோஷ்டிகளாக இயங்கி வருகின்றனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே அவ்வப்போது முறைப்புகளும் லேசான கெட்ட வார்த்தை திட்டு சண்டைகளும் நடக்கும். ஆனால், இதுவரை அது அடிதடியானதில்லை.

இந் நிலையில் திருவண்ணாமலை நகரச் செயலாளர் தியாகராஜன் காந்தி சிலை அருகே உள்ள பிச்சாண்டி எமெலே அலுலகத்தில் நிர்வாகிகளுடன் பேசிக் கொண்டிருந்தார். அவருடன் 100க்கும் மேற்பட்ட தொண்டர்கள் இருந்தனர்.

அப்போது நகரச் செயலாளருக்கும், நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இரு தரப்பிருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் நகரச் செயலாளர் தியாகராஜன் உருட்டுக் கட்டையால் தாக்கப்பட்டதில் அவரது மண்டையில் அடிபட்டு, பலத்த காயமடைந்தார்.

மேலும் தியாகராஜின் காரும் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டது. இதையடுத்து அவரது ஆட்கள் திருப்பித் தாக்க ஆரம்பித்தனர். இதில் சேர்கள் பறந்தன, வேட்டிகள் உருவப்பட்டு சட்டைகள் கிழிக்கப்பட்டு அலங்கோலமாயின.

இந்த மோதல் அப்படியே ரோட்டுக்கும் பரவியது. இரு தரப்பினரும் அந்த வழியாக வந்த வாகனங்கள் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். இதில் தனியார் பஸ்சின் கண்ணாடி உடைந்து நொறுக்கியது.

தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து இரு தரப்பினரையும் பிரித்துவிட முயன்றனர். ஆனால் போலீசாரை தள்ளிவிட்டபடி ஒருவர் மீது ஒருவர் பாய்ந்து இரு தரப்பினரும் அடித்துக் கொண்டனர். இதையடுத்து அங்கு அதிரடிப் படையினர் வரவழைக்கப்பட்டு மோதலை தடுத்து நிறுத்தினர்.

பின்னர் நகர செயலாளர் தியாகராஜனின் ஆதரவாளர்கள் காந்தி சிலை முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் மேலும் அங்கு பதட்டம் உருவானது. காயமடைந்த தியாகராஜன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செய்தி: thatstamil

1 Comments:

Blogger Raji said...

ராமன் ஆண்டாலும் ராவணண் ஆண்டாலும்..நடப்பது தான் நடக்கும்-ங்குற கதையா இருக்கு...
நடுவுல கஷ்ட்டபடுறது பொது மக்கள் தான்..

7:37 PM  

Post a Comment

<< Home