Monday, December 25, 2006

6 நாட்கள் வைகோ "நடந்தது...' என்ன?

பெரியாறு அணை பிரச்னையில் போதிய விழிப்புண்ர்வு மக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் எழவில்லை என்ற குறை இருந்தது. எனவே விழிப்புண்ர்வையும், எழுச்சியையும் ஏற்படுத்த வைகோ, மதுரையில் இருந்து கூடலூர் வரை ஆறு நாள் உரிமை காப்பு நடைபயண்த்தை கடந்த 18ம் தேதி தொடங்கினார்.

பொதுவாக வைகோ நடைபயண்ம் என்றாலே தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொள்ளும். இம்முறையும் அதே பரபரப்பு தொற்றிக் கொண்டதால், அவரது பேச்சு மூலம் ஆக்ரோஷமான கருத்துக்கள் வெளிப்படும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து அரசியல் கட்சிகள் தரப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.



முதல் நாள்: 18.12.06

மதுரையில் இருந்து புறப்பட்ட வைகோ அச்சம்பத்து, நாகமலை புதுக்கோட்டை, ராஜன்பாடி, வடபழஞ்சிவிலக்கு வழியாக செக்கானூரணி வந்து, பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு இரவு அ.தி.மு.க.,வைச் சேர்ந்த ஒருவர் வீட்டில் தங்கினார். அவரது இரவு உண்வு இரண்டு இட்லி, ஒரு ஊத்தப்பம் மட்டுமே. அதன் பிறகு உறங்கச்சென்றுவிட்டார். நடந்து வந்த களைப்பில் உடன் வந்த தொண்டர்களும் மண்டபம் ஒன்றில் தூங்கினர்.

இரண்டாம் நாள்: 19.12.06

காலை 5.30 மணிக்கு முன்பே எழுந்து அனைத்து நாளெடுகளையும் படித்து முடித்தார். தொண்டர்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல், இட்லியை சாப்பிட்ட பின்னர் காலை 10.30 மணிக்கு செக்கானூரணியில் இருந்து புறப்பட்டு கொக்குளம்பிரிவு, ஒத்தப்பட்டிபிரிவு, மூணாண்டிபட்டி வழியாக கருமாத்தூர் வந்தபோது அருள் ஆனந்தர் கல்லூரி முன்பாக மாண்வர்கள் காத்திருந்து, வைகோவை வரவேற்றனர். நத்தம்பட்டி முன்பாக வைகோ நடந்து வந்தபோது வெகுதொலைவில் வயல்களில் வேலை செய்தவர்கள் ஓடி வந்ததை பார்த்து அங்கேயே 15 நிமிடம் வைகோ நின்று விட்டார். ஓடி வந்தவர்கள் வந்து சேர்ந்ததும் அவர்கள் கூறிய குறைகளை காதுகொடுத்து கேட்டார்.

செல்லம்பட்டியை கடந்த போது "ஆல் இந்தியா ரேடியோ' விற்கு நடந்து கொண்டே பேட்டியளித்தார். வாலாந்தூரை நெருங்கும்போது மொபைல் போன் அழைப்புகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தன. அனைத்திற்கும் நடந்து கொண்டே பதில் கொடுத்தார். அப்போதுதான் எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் வைகோவிற்கு எதிராக கருத்துகள் வெளியிட்டது குறித்த பரபரப்பு தொற்றிக்கொண்டது.

சிறிது நேரத்தில் ஜெயா "டிவி'யில் இருந்து பேட்டி கேட்டபோது துவக்கத்தில் சாதாரண்மாக பதில் அளித்தார். கணேசன் பற்றி கேட்டபோது, சற்று "டென்ஷனாக' காண்ப்பட்டார். ஆனாலும் "சட்டென' சமாளித்து அடுத்தடுத்த கேள்விகளுக்கு பதிலளிக்கத் துவங்கினார். இரவு உசிலம்பட்டியில் வைகோ தங்கினார்.



மூன்றாம் நாள்: 20. 12. 06

காலையில் பொங்கல் மட்டும் சாப்பிட்டுவிட்டு புறப்பட்டபோது, அவரை நிருபர்கள் சூழ்ந்து, இரண்டு எம்.பி.,க்கள் கூறிய கருத்துகள் குறித்து கேட்டனர். "எண்ண்ற்ற தடைகளை கடக்க வேண்டி உள்ளது'. என ஒருவரி பதிலை கூறிவிட்டு நடைபயண்த்தை துவக்கினார். மாகரையை கடக்கும் போது வெயில் சற்று "சுள்ளென்று' அடிக்கவே தலையில் உருமா கட்டிக் கொண்டார். மதிய உண்வு தொண்டர்களுடன் தொண்டராக ஆண்டிபட்டி கண்வாய் வேளாங்காண்ணி மாதா சர்ச் பகுதியில் அமர்ந்து சாப்பிட்டார். சற்று நேர ஓய்வுக்குப்பின் புறப்பட தயாரானபோது நிருபர்களிடம் "விசேஷம் ஏதும் இல்லை' என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

சாஸ்தா கோவிலில் பூசாரி விபூதி, சந்தனம் தந்தார். சந்தனத்தை மட்டும் எடுத்து நெற்றியில் வைத்துக் கொண்டார். எனவே, பூசாரி விபூதியை நெற்றியில் வைத்தார். அதன் பின்னர் சிறிது தூரம் வந்ததும் விபூதியை வைகோ அழித்துவிட்டார். கணேசன் பிரச்னை உச்சகட்டத்தை எட்டிய நிலையில், இடையிடையே மொபைல் போனில் ஏராளமான அழைப்புகள் வந்தபோதும் சளைக்காமல் பதில் கூறிக்கொண்டு வந்தார். ஆண்டிபட்டி வந்த வைகோ நேராக பொதுக்கூட்ட மேடைக்கு சென்று விட்டார். கூட்டம் முடிந்ததும் இரவு தங்க உள்ள வீட்டிற்கு நடந்தே சென்றார். அ.தி.மு.க.,வினர் ஏற்பாடு செய்திருந்த சைவ உண்வை சாப்பிட்டார்.

நான்காம் நாள்: 21.12.06

தினமும் நடைபயண்ம் துவங்கும் போதும் தொண்டர்கள் கொடுக்கும் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு பயண்த்தை துவக்கினார். ஆண்டிபட்டி எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, தேனி நோக்கி புறப்பட்டார், வழியில் எந்த இடத்திலும் ஓய்வு எடுக்கவில்லை. எதிர் வெயில் முகத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய போதும், வெள்ளைத் துண்டால் தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு பயண்த்தை தொடர்ந்தார். முன்னதாக சென்ற பிரசார ஜீப்பில் எம்.ஜி.ஆர்., பட தத்துவப்பாடல்கள் விடாமல் ஒலித்துக்கொண்டே இருந்தன.

குன்னூரில் வைகோ மகன் வையாபுரி நடைபயண்த்தில் இணைந்து கொண்டார். மதிய உண்விற்குப் பின் மாவட்ட செயலர்களுடன் ஆலோசனை நடத்தினார். மாலையில் தேனி பொதுக்கூட்டத்தில் பேசிய போது, அருகில் வைகோ குடும்பத்தினர் வேனில் அமர்ந்தவாறு பேச்சை கேட்டனர். அவர்களது முகங்களில் லேசான சோகம் காண்ப்பட்டாலும், மன உறுதியும், நெஞ்சுரமும் கொண்ட வைகோ, மேடையில் "கணீர்' குரலில் பேச்சை தொடர்ந்தார். பொதுக்கூட்டம் முடிந்த பின்னர் வீரபாண்டி சென்று உடன் வந்த 15 மாவட்ட செயலர்களுடன் நள்ளிரவு 2 மணி வரை ஆலோசனை நடத்தினார்.

ஐந்தாம் நாள்: 22.12.06

காலையிலேயே சற்று "டென்ஷனாக' காண்ப்பட்டார். இருந்த போதும் 10.15 மணிக்கு நடைபயண்த்தை துவக்கினார். வழிநெடுக அதிக அளவில் விவசாயிகள் திரண்டு வரவேற்றனர். சின்னமனூரில் மதிய உண்வையும் தொண்டர்களோடு அமர்ந்து சாப்பிட்டார். இடையே "தாயகத்தில்' இருந்து மொபைலில் அழைப்பு வரவே, சாப்பிட்ட கையை கழுவாமல் 20 நிமிடம் நின்று கொண்டே பேசினார். நடைபயண்த்தில் தி.மு.க., கலவரத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக வந்த தகவலால் சற்று "டென்ஷன்' அடைந்தார். பின்னர் மாலை 5 மணிக்கு புறப்பட்டு உத்தமபாளையம் நோக்கி நடந்தார். வயல்வெளிகளில் நாற்று நடுதல் உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டிருந்த பெண்கள் வைகோவை உற்சாகத்துடன் வரவேற்றனர்.

இரவு உத்தமபாளையத்தில் பொதுக்கூட்டம் முடித்து அரசு பொதுப்பணித்துறை விடுதியில் தங்கினார்.

ஆறாம் நாள்: 23.12.06

உத்தமபாளையத்தில் காலை 9.45 மணிக்கு துவங்கி அனுமந்தன்பட்டி, புதுப்பட்டி வழியாக கம்பத்தை நோக்கி வந்த போது, நிறைவு நாள் நடைபயண்ம் என்பதால் தமிழகம் முழுவதும் இருந்து வந்த ம.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் பெருமளவில் சேர்ந்து கொண்டதால் மூன்று கி.மீ., தூரத்திற்கு நடைபயண்ம், ஊர்வலமாக மாறியது. கம்பத்தில் மதியம் நடந்த பொதுக்கூட்டத்தில் "தாயகம்' குறித்து பேசும்போது உண்ர்ச்சிவசப்பட்டு, கண் கலங்கினார்.

மதிய உண்வுக்குப்பின் மாவட்ட செயலர்கள், மாநில கட்சி நிர்வாகிகளை வைத்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ள நிலையில் "பரபரப்பு' தொற்றிக்கொண்டது.

கம்பம் நடராஜன் திருமண் மண்டபத்தில் கூட்டம் நடத்தப்பட்டு கணேசன், ராமச்சந்திரனும், அவர்கள் வகித்த பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள தகவலை நிருபர்களிடம் வைகோ அதிகாரபூர்வமாக அறிவித்தார். அதன் பிறகு நடைபயண்த்தை துவக்கி, இரவு 10 மணிக்கு கூடலூரில் நிறைவு செய்தார்.

மருத்துவ சோதனை:

நடைபயண் குழுவுடன் முதலுதவிக்காக மருத்துவ குழுவினர் காரில் பின் தொடர்ந்து வந்திருந்தனர். ஆறு நாளும் நடைபயண்த்தை துவக்கும் போதும் இரவு ஓய்வு எடுக்கும் போதும், வைகோ மருத்துவசோதனை செய்து கொண்டார். மதுரையில் நடையை துவக்கியபோது என்ன வேகம் இருந்ததோ, அதே வேகம் கூடலூரில் நிறைவு செய்யும் வரை தொடர்ந்தது. இரண்டு எம்.பி.,க்கள் கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்த மேற்கொண்ட முயற்சி காரண்மாக கடைசி நான்கு நாட்களும் வைகோ "டென்ஷனாகவே' காண்ப்பட்டார். இருந்த போதிலும் அடுத்தடுத்து என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும், இரண்டு எம்.பி.,க்களுக்கு பின்னணியில் உள்ளவர்கள் நகர்த்தும் "காய்களை' எங்கெங்கு "வெட்ட' வேண்டும் என்பதில் அவர் மிகத்தெளிவாக இருந்தார் என்பதற்கு, மொபைல் போன்களில் கட்சி நிர்வாகிகளுக்கு அவர் அடுத்தடுத்து அளித்த உத்தரவுகளெ உதாரண்ம்.


எழுச்சியும், வெற்றியும் இணைந்த நடைபயண்ம்


  • வைகோ செல்லும் வழியில் அவரை காண்வும், பேச்சை கேட்கவும் பொதுமக்களும், விவசாயிகளும் ரோட்டோரம் ஏராளமாக கூடினர். ஆனால், அவர்களிடம் வைகோ "பரபரப்பான" அரசியல் பேச விரும்பவில்லை. தனது நடைபயண்த்தின் நோக்கம் குறித்து மட்டுமே பேசினார்.
  • சீனப்பெருஞ்சுவர், எகிப்து பிரமிடுகள், காவிரி கல்லணை எந்த தொழில் நுட்பத்தின் படி கட்டப்பட்டதோ அதே தொழில்நுட்பத்தின் படி பெரியாறு அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணை இன்னும் ஐந்தாயிரம் ஆண்டுகள் ஆனாலும் உடையாது என்ற கருத்தை சென்ற இடங்கள் தோறும் ஆணித்தரமாக வலியுறுத்தினார்.
  • பெரியாறு அணை நீர் இல்லை என்றால் ஐந்து மாவட்ட மக்களின் வாழ்க்கையே சிக்கலாகி விடும் என்ற வைகோவின் எச்சரிக்கை மக்கள் மனதிலும், விவசாயிகளின் மனதிலும் ஆழப்பதிந்து விட்டது.

இனிவரும் காலங்களில் ஐந்து மாவட்டங்களை பொறுத்தவரை பெரியாறு அணை பிரச்னையை சரியான முறையில் கையாளாத எந்த அரசியல் கட்சியும், மக்களிடம் அங்கீகாரம் பெற முடியாது என்ற நிலையை இந்த நடைபயண்த்தில் மூலம் வைகோ உருவாக்கி விட்டார். அவரது நடைபயண்ம் மூலம் பெரியாறு அணை பிரச்னை குறித்து தெளிவான விழிப்புண்ர்வு ஏற்பட்டுள்ளது. வைகோ மெற்கொண்ட நடைபயண்ம் எழுச்சி பயண்மாக மட்டுமல்ல, வெற்றிப் பயண்மாகவும் நிறைவடைந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.

நன்றி: தினமலர்

0 Comments:

Post a Comment

<< Home