ஆட்கள வராமல் அசிங்கப்பட்ட எல்.கணேசன்
நிர்வாகிகள் வரவில்லை-எல்.ஜி. கூட்டம் ரத்து
திருச்சியில் இன்று மதிமுக அவைத்தலைவரும், திருச்சி எம்பியுமான எல்.கணேசன் ஏற்பாடு செய்திருந்த ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
வைகோவுக்கு எதிராக எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் தங்கள; கருத்துகளை தெரித்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் இருந்து எல்.கணேசன் நேற்று சென்னை வந்து தனது ஆதரவாளர்களுடம் ஆலோசனை நடத்தினர்.
சென்னையில் ஆலோசனை நடத்தி விட்டு இன்று காலை மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் மூலம் திருச்சி வந்தார். ஆனால் அவரை வரவேற்க திருச்சி மாவட்ட முக்கிய நிர்வாகிகள் யாரும் வரவில்லை. தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட புற மாவட்டங்களில் இருந்து 10 நிர்வாகிகள் மட்டுமே அவரை வரவேற்றனர்.
இதனால் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்திருந்த எல்.கணேசன் திருச்சி கூட்டத்தை ரத்து செய்தார். பின்னர் அவர் அங்கிருந்து தஞ்சையில் ஆலோசனை நடத்த அங்கு புறப்பட்டு சென்றார்.
நன்றி - thatstamil

0 Comments:
Post a Comment
<< Home