Saturday, December 23, 2006

வைகோவின் 6 நாள் நடைபயண்ம் கூடலூரில் இன்று நிறைவடைகிறது

முல்லை பெரியாறு உரிமை காப்பு நடை பயண்ம் மேற்கொண்டுள்ள வைகோ, 6ம் நாளான இன்று தேனி மாவட்டம் கூடலூரில் நிறைவு செய்கிறார்.

முல்லை பெரியாறு உரிமை காப்பு நடைபயண்த்தை கடந்த 18ம் தேதி மதுரையில் துவக்கிய வைகோ, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி வழியாக நேற்று முந்தினம் தேனி வந்தார். தேனியில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் வீரபாண்டி சென்று தங்கினார். நேற்று காலை, கோட்டூர், சீலையம்பட்டி வழியாக சின்னமனூர் வந்து சேர்ந்தார். மதிய உண்வை முடித்த பின்னர் இரவு 7 மணிக்கு உத்தபாளையம் வந்தடைந்தார். அங்கு பொதுக்கூட்டத்தில் வைகோ பேசினார். இன்று காலை உத்தமபாளையத்தில் இருந்து புறப்பட்டு, அனுமந்தன்பட்டி, புதுப்பட்டி வழியாக கம்பம் செல்லும் வைகோ, கடந்த 6 நாட்களாக மேற்கொண்ட நடைபயண்த்தை கூடலூரில் நிறைவு செய்கிறார். இந்நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்த கட்சி நிர்வாகிகள் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

நடைபயண்த்தில் நேற்று, பொருளாளர் கண்ண்ப்பன், நாஞ்சில் சம்பத், தேனி மாவட்ட செயலர் ராமகிருஷ்ண்ன், எம்.எல்.ஏ.,க்கள் வரதராஜன், வீர இளவரசன், ஞானதாஸ், திருமலைக்குமார், மாநில இளைஞர் அணி அமைப்பாளர் அழகுசுந்தரம், துணை பொதுச் செயலர்கள் நாசரேத் துரை, மல்லை சத்யா மற்றும் பலர் பங்கேற்றுள்ளனர்.

நடைபயண்ம் இன்றுடன் முடிவடைவதால் திருவாரூர் மாவட்ட செயலர் தியாகபாரி தவிர மற்ற அனைவரும் வந்துள்ளனர். தற்போதைய கட்சி பிரச்னையில் மாவட்ட செயலர்கள் அனைவரும் வைகோ பின்னால் உள்ளனர் என்பதை நிரூபிக்கும் வகையில் இன்று நடைபெறும் நடைபயண் நிறைவு நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்கின்றனர்.

நன்றி தினமலர்




மதுரையிலிருந்து கூடலூர் வரை பெரியாறு அணை உரிமை காப்பு நடைப்பயண்ம் மேற்கொண்டு, 5-வது நாளாக வெள்ளிக்கிழமை தேனி மாவட்டம் கோட்டூர் அருகே, விவசாயி போஸ் என்பவரது தோட்டத்தில் வாழைக் கன்று நட்டு, மண்வெட்டியால் மண்ணை அணைக்கிறார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.


உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தக்கோரி, மதிமுக பொதுச் செயலர் வைகோ மேற்கொண்டுள்ள பெரியாறு உரிமை காப்பு நடைப்பயண்ம் கூடலூரில் சனிக்கிழமை இரவு நிறைவடைகிறது.

நடைப்பயண்த்தை டிச. 18-ம் தேதி மதுரையிலிருந்து தொடங்கினார் வைகோ. உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி வழியாக வியாழக்கிழமை இரவு வீரபாண்டிக்கு வந்தார்.

அங்கிருந்து வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்குப் புறப்பட்டு சின்னமனூருக்கு சென்று கொண்டிருந்தார். கோட்டூர் அருகே தோட்டத்தில் வாழைக் கன்றுகளை நடும் பணியில் ஈடுபட்டிருந்த விவசாயி போஸ் மற்றும் கூலித் தொழிலாளர்கள் வைகோவை வரவேற்றனர்.

சாலையோர தோட்டத்திற்கு அழைத்துச் சென்று வாழைக் கன்றுகளை நடும்படி அவர்கள் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து வாழைக் கன்றுகளை வைகோ நட்டார்.

இதைத் தொடர்ந்து கோட்டூர் வழியாக சீலையம்பட்டிக்கு புறப்பட்டார். அப்போது தள்ளுவண்டியில் இளநீர் விற்பனை செய்து கொண்டிருந்த ஊனமுற்ற ரவி என்பவர் அவருக்கு இளநீர் கொடுத்து வரவேற்றார்.

கோட்டூர், சீலையம்பட்டி ஆகிய ஊர்களில் பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் பெண்கள் பெரும் திரளாக நின்று வைகோவை வரவேற்றனர்.

அவருடன் மதிமுக மாவட்டச் செயலர் கம்பம் ராமகிருஷ்ண்ன் எம்.எல்.ஏ,, எம்.பி.க்கள் சிவகாசி சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், பொள்ளாச்சி கிருஷ்ண்ன், தேனி பொன்முடி, நகரச் செயலர் சேகர் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் சென்றனர்.

ஆறாவது நாளான சனிக்கிழமை காலை 10 மணிக்கு உத்தமபாளையத்திலிருந்து பயண்த்தை தொடங்கி பகல் 12 மணிக்கு கம்பம் சென்றடைகிறார், அங்கு பொதுக்கூட்டத்தில் பெசுகிறார்.

இன்று நிறைவு: நடைப்பயண்த்தை கூடலூரில் சனிக்கிழமை இரவு நிறைவு செய்கிறார் வைகோ. அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பெசுகிறார்.
நன்றி தினமணி.

0 Comments:

Post a Comment

<< Home