Friday, December 08, 2006

தமிழக காங்கிரஸ், பா.ம.க.வை பின் தொடரும் தே.மு.தி.க.

அரசியல் கட்சிகளுக்கு இடையே அடிதடி, சட்டை கிலிப்பு துவங்கி, கொலை வரை செல்வது சகஜம் தான். ஆனால் ஒரு கட்சிக்குள்ளேயே அட்தடி நடப்பது வெகு குறைவே.

உள்கட்சி தகராறில் பிரபலமானது தமிழக காங்கிரஸ் தான். அதற்கு அடுத்தபடியாக இருப்பது பா.ம.க. இந்த வரிசையில் தே.மு.தி.க.வும் சேர்ந்துவிட்டது என்பதுக்கு உதாரணம் தான் சமீப காலங்களில் அடிக்கடி நடக்கும் உள்கட்சி சண்டைகளும், அடிதடிகளும். நேற்று இதேபோல் மற்றொரு அடிதடி...



நேற்று கடலூர் மாவட்டத்தில் நடந்த தே.மு.தி.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் நடந்த கைகளப்பில் நகர மகளிர் அணியை சேர்ந்த பெண் உட்பட பலர் தாக்கப்பட்டனர்.

இதுகுறித்து மாவட்ட பிரதிநிதி பார்த்திபன் கூறியதாவது:

ஆரம்பக் காலங்களில் மன்றங்களில் இருந்து வந்த எங்களுக்கு கட்சியில் மறியாதை இல்லை. ஆனால், மற்ற கட்சியில் இருந்து வந்தவங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். மாற்று கட்சியில் இருந்து வந்து இங்கு பதவியை பெற்றவர்கள் எங்களை செல்லா காசாக நினைக்கின்றனர். பணம் கொடுத்து நிர்வாகி பதவியை பெற்றவர்கள் தான் தற்போது மாவட்ட பொறுப்பில் இருக்கின்றனர். தற்போது இவர்கள் பணம் பெற்று கொண்டு நகர நிர்வாகி பதவியை வழங்குகின்றனர். இவர்களால் தற்போது தே.மு.தி.க. ஜாதி அடிப்படையில் செயல்பட ஆரம்பித்துவிட்டது. தமிழகத்தில் ஊழல் இருக்க கூடாது என தலைவர் விஜயகாந்த் முழக்கமிடுகிறார். முதலில் கட்சிகுள்ளேயே இருக்கும் இந்த ஊழல் பெருச்சாலிகளை ஒழிக்க வேண்டும். மாவட்ட அளவில் செயல்வீரர்கள் கூட்டம் கூட்டியிருக்கின்றனர். ஆனால், நிர்வாகிகள் பலருக்கு இந்த கூட்டம் குறித்து தெரிவிக்காததால், கூட்டமின்றி வெறிச்சோடி கிடக்கிறது.இதனை நாங்கள் தட்டி கேட்டது தவறு என்று கூறுகின்றனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

---
பல நதிகள் கலந்தாலும், கடலின் உப்பு தன்மை குறைய போவதில்லை என வெறும் வாய் சவடால் விட்டால் போத்தாது, கட்சிகுள்ளேயே, பணம் பெற்று தான் பதவி தருபவர்கள் எப்படி மக்களுக்கு உண்மையாக இருப்பார்கள் என மக்கள் சிந்திக்க வேண்டும். கடலில் குடிநீர் கலந்தால், கடல் நீரின் உவர்ப்பு தன்மை மாறாது, ஆனால், கூவம் போன்ற மாசுபட்ட நதிகள் கடலில் கலந்தால் கடல் நீரும் மாசுபடும் என்று தான் கூவம் கடலில் கலக்காமல் தடுப்பு அமைத்துள்ளனர் என்பதை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தும், மக்களும் உணர வேண்டும்.

மற்ற பெரிய கட்சிகளான தி.மு.க, அ,தி.மு.க போன்ற கட்சிகளில் இப்படி அடிதடி நடப்பது மிகவும் குறைவு தான். ம.தி.மு.க.வில் இது போல் நடந்ததே இல்லை என்பதையும் இங்கு நான் நினைவுகூற விரும்புகிறேன்.

0 Comments:

Post a Comment

<< Home