Sunday, December 31, 2006

'எல்.ஜி.,'ன்னா...?

'எல்.ஜி.' பற்றி ஒரு நன்பரின் கருத்து

'எல்.ஜி.,'ன்னா, கூட்டுப் பெருங்காயம்ன்னு நாட்டு மக்களுக்குத் தெரிந்த அளவுக்கு, எல்.கணேசனை எத்தனை பேருக்குத் தெரியும்? 'தமிழ் மொழிப் போர் தளபதி'ன்னு பெரிசாச் சொல்லிக்கிடுவாரு; இதே பேருல, பா.ஜ., கட்சியில் உள்ளவரை, இல.கணேசன்னு, 'இன்ஷியல்' சுத்தமா தமிழ்ல சொல்றாங்க; ஆனா, பகுத்தறிவுப் பாசறையில் உருவான இவர், 'இல' என்றால், 'சென்டி மென்ட்' படி, இல்லை என்றாகிவிடும் என்று, இன்ஷியலை கூட, 'எல்' என்று ஆங்கிலத்தில் போட்டுக் கொள்வார்.

சில காரோட்டிகள் ஓட்டும் கார்களில் நிரந்தர, 'எல்' போர்டு இருப்பது போல், தமிழக அரசியல் சாலையில் என்றென்றைக்கும் 'எல்' போர்டு ஆன எல்.கணேசன், பழக்க தோஷம் காரணமாக, ம.தி.மு.க.,வின் அவைத் தலைவர் ஆக்கி, மதிப்பும், மரியாதையும் கொடுத்திருந்தார் வைகோ.

தி.மு.க.,வில் இருந்து விலகியது முதல், சமீபத்தில் அ.தி.மு.க.,வுடன் கூட்டு வைத்தது வரை சகலத்திலும் இந்த 'எல்' போர்டின் ஆலோசனைகளைக் கேட்டு நடந்ததால் தானோ என்னமோ சகல திறமைகளும் இருந்தும், தமிழக அரசியலில் வைகோ சோபிக்காமலிருந்தது.தான் எம்.பி.,யாகவுமிருந்து கொண்டு, கடந்த சட்டசபைத் தேர்தலில் தன் மகனுக்கு எம்.எல்.ஏ., சீட்டும் கேட்டு, கிடைக்காததாலும், மத்திய அமைச்சர் பதவி வாங்கித் தராததாலும், 'எதைத் தின்றால் பித்தம் தெளியும்' என்பது போல், 'எதைச் செய்தால் அமைச்சர் பதவி கிடைக்கும்' என்ற ஆலோசனை பெற்று, வைகோவை சாடத் துவங்கியுள்ளார் எல்.ஜி.,'அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதை'யாக அமைச்சர் பதவியை நம்பி, அவைத் தலைவர் ஆக வைத்திருந்த வைகோவை விட்டுப் போவது எல்.ஜி.,க்கு நல்லதல்ல; ஆனால், வைகோவுக்கு நல்லது.

'விட்டது தொல்லை விளாம்பழத் தோலோட...'

0 Comments:

Post a Comment

<< Home