Wednesday, December 27, 2006

மதிமுக-அதிமுக உறவு வலுப்படும்: வைகோ

டிசம்பர் 26, 2006

சென்னை: மதிமுக இரும்புக்கோட்டை போல கட்டுக்கோப்புடன் இருக்கிறது. அதிமுகவுடன் உறவு மேலும் வலுப்படும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

பெரும் பரபரப்புக்கு மத்தியில் நேற்று நடந்த உயர் நிலைக் குழுக் கூட்டத்திற்குப் பின்னர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், மதிமுக கட்டுக்கோப்பாக உள்ளது. எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோரை நீக்கியதால் கட்சிக்கு எந்த பின்னடைவும் ஏற்படவில்லை.

எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் என்னைப் பற்றி வெளிப்படுத்திய கருத்துக்கள், வெறுப்பில் கக்கிய வார்த்தைகள். அதிமுகவுடன் மதிமுக கொண்டுள்ள உறவு வலுப்படும், மேலும் உறுதியாக இருக்கும்.

கட்சியின் சட்டத் திட்ட விதி 19(5)ன் கீழ் கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோரது பதவிகளைப் பறிக்க பொதுச் செயலாளராகிய எனக்கு முழு அதிகாரமும் உள்ளது. இருவரின் பதவியைப் பறிக்கும் முடிவை யாருடைய தூண்டுதலினாலோ அல்லது கம்பத்தில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலோ நான் எடுக்கவில்லை.

உயர்நீதிமன்றத்தில் எங்களது நிலையை விளக்க வாய்ப்பு தரப்படவில்லை. இந்தப் பிரச்சினையை நாங்கள் சட்டரீதியாக சந்திப்போம்.

எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் மூலமாக மதிமுகவுக்கு பெயரையும், புகழையும் களங்கப்படுத்த முதல்வர் கருணாநிதி முயலுகிறார் எனக்கு மிகுந்த நம்பகமான தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில்தான் நான் கருணாநிதி மீது குற்றம் சாட்டினேன்.

இதற்காக என் மீது திமுக வழக்கு போடும் என ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார். அதை சட்டரீதியாக சந்திக்க நான் தயாராக உள்ளென். மதிமுகவிலிருந்து பலரையும் பிரிக்க நீண்ட நாட்களாகவே திமுக தரப்பு தனது முயற்சிகளைத் தொடங்கி விட்டது.

நான் மதிமுகவை அதிமுகவோடு இணைத்து விடப் போவதாகவும், அதிமுக அவைத் தலைவராகப் போவதாகவும் வதந்திகளைப் பரப்பினர். இதுகுறித்து திருச்சியில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் வெற்றியாளர்கள் கூட்டத்தில் நான் பேசுகையில், யாராவது மதிமுகவை அதிமுகவோடு இணைப்பதாக சொன்னால் அவர்கள் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையிலிருந்து தப்பி வந்தவர்கள் என நினைத்து மீண்டும் அங்கேயே அனுப்பி வையுங்கள் என்றேன்.

இந்த வதந்தியை மதிமுகவினர் நம்பவில்லை என்பதால் இது அடிபட்டுப் போனது. இதைத் தொடர்ந்து பொள்ளாச்சி எம்.பி. டாக்டர் கிருஷ்ண்னை இழுக்கப் பார்த்தனர். அவரை தொடர்ந்து நான்கு நாட்கள் சந்தித்துப் பேசியுள்ளனர். மதிமுகவுக்கு எதிர்காலம் இல்லை, கப்பலில் ஓட்டை விழுந்து விட்டுவிட்டது, மாலுமி நம்முடன் வர மாட்டார். கப்பலோடு மூழ்கிப் போவார் என்று அவரிடம் கூறியுள்ளனர்.

மேலும், நாடாளுமன்றத்தில் எங்களை திமுக அணியில் அமர வையுங்கள் என்று சபாநாயகரிடம் கடிதம் கொடுக்க டிராப்ட் ரெடி செய்து விட்டதாகவும், அதில் கையெழுத்திட்டால் உங்களுக்கு நிறையப் பண்ம் கொடுப்பார்கள் என்று கூறியுள்ளனர்.

அத்தோடு நில்லாமல், வைகோவுக்கு வயதாகி விட்டது. உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அவரது கரீஷ்மா போய் விட்டது. அதனால்தான் கேரளாவுக்குப் போய் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டார் என்றெல்லாம் பேசியுள்ளனர்.

இதையும் தாண்டி கிருஷ்ண்னுக்கு நெருக்கமான பொதுக்குழு உறுப்பினர் நல்லாம்பள்ளி நாச்சிமுத்து வீட்டுக்குப் போய் அவரை எங்கள் பக்கம் வரச் சொல்லுங்கள். கிருஷ்ண்னுக்கு ரூ. 15 கோடியும், உங்களுக்கு 1 கோடி ரூபாயும் தருகிறோம் என்று கூறியுள்ளனர்.

அதற்கு கிருஷ்ண்ன், நீங்கள் தரும் 15 கோடி ரூபாய், 15 ரூபாவுக்கு சமம் என்று கூறி விரட்டியடித்துள்ளார். இதை இன்றைய கூட்டத்தில் கிருஷ்ண்னே கூறினார்.

மதிமுக பொதுக்குழு உறுப்பினர்களை மிரட்டி எல்.கணேசன் அணியில் இணைக்க திமுக நேரடியாக முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. திமுக அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் நேரடியாகவே அணுகி பேசி வருகின்றனர்.

முதலில் ஆசை வார்த்தை கூறுகிறார்கள், பணியாவிட்டால் மிரட்டுகிறார்கள், வழக்குகள் பாயும் என அச்சுறுத்துகிறார்கள்.

மதிமு.க என்று ஒரு கட்சி இருக்கிறதா என முன்பு முதல்வர் கருணாநிதி கேட்டார். அப்படிப்பட்டவர் இப்போது ஏன் மதிமுகவை அழிக்க தீரமாக பாடுபட வேண்டும்?. எனவேதான் இதுகுறித்து பிரதமருக்கும், சோனியா காந்திக்கும் நான் கடிதம் மூலம் தெரியப்படுத்தினேன்.

கருணாநிதிதான் கெஞ்சினார்:

பூந்தமல்லி நீதிமன்றத்திற்கு நான் கொண்டு வரப்பட்டபோது அங்கு என்னை வந்து முதல்வர் கருணாநிதி சந்தித்தார். எனது கைகளைப் பிடித்துக் கொண்டு பிரசாரத்திற்கு கண்டிப்பாக வர வேண்டும் என கெஞ்சினார். இதுதான் உண்மை.

அதை விடுத்து என்னை சிறையிலிருந்து வெளியே கொண்டு வாருங்கள் என நான் யாரிடமும் கெஞ்சவில்லை. யாருடைய உதவியையும் நான் நாடவில்லை. நான் ஜாமீனில் வெளியே வந்தபோது கூட அரை மனதுடந்தான் வந்தேன்.

அரசியலில் கருத்து வேறுபாடுகள் எழுவது சகஜமானதுதான். அதற்காக யாரும், யாரையும் அழித்து விட முடியாது.

இன்றைய (நேற்று) கூட்டம் கட்சியின் விதி 19(5), 35(14) ஆகியவற்றின் கீழ் எனக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி கூட்டப்பட்டது. இதை சீர்குலைக்க சிலர் முயன்றனர். சதித் திட்டங்களை தீட்டி வைத்திருந்தனர். ஆனால் அவை தங்களுக்கு எதிராக திரும்பி விடுமோ என்று பயந்து அந்த எண்ண்த்தை கடைசி நேரத்தில் மாற்றிக் கொண்டு விட்டனர்.

எல்.ஜி.க்கு ஏன் அமைச்சர் பதவி தரவில்லை?

கட்சியின் பொதுக்குழு எடுத்த முடிவின்படிதான் எல்.கணேசனுக்கு மத்திய அமைச்சர் பதவியை வழங்க நான் அனுமதிக்கவில்லை. ஆனால் எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் தொடர்ந்து அமைச்சர் பதவி கேட்டு கோரி வந்ததால், நான் பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து இதுகுறித்துப் பேசினேன்.

அப்போது அவர்கள் மதிமுகவின் நான்கு எம்.பிக்களையும் கண்க்கு காட்டி திமுக அமைச்சர் பதவியைப் பெற்று விட்டதாகவும், அவர்களில் 2 பேரை திரும்பப் பெற்றால்தான் மதிமுகவுக்கு அமைச்சர் பதவி தர இயலும் என்றும் கூறி விட்டனர்.

அதற்கு நான் உடனடியாக, அது நம்பிக்கைத் துரோகம், பச்சைத் துரோகம். அதை நான் சகித்துக் கொள்கிறேன். அவர்களிடம் போய் அமைச்சர்களை வாபஸ் பெறுங்கள் என்று கேட்க மாட்டேன் என்றேன். மேலும், திமுக வேறு, மதிமுக வேறு என்பதையும் அவர்களிடம் தெளிவுபடுத்தினேன்.

எனது இந்தக் குற்றச்சாட்டை முதல்வர் கருணாநிதி இதுவரை மறுக்கவில்லை. விளக்க முன்வரவில்லை. பிரதமர் மன்மோகன் சிங்கும், சோனியா காந்தியும் சென்னைக்கு பலமுறை வந்து சென்றுள்ளனர். அவர்களிடம் வைகோ இப்படிக் கூறுகிறாரே என்று விளக்கம் கேட்கவும் அவர் முன்வரவில்லை.

இப்போது தவிர்க்க முடியாத கட்டாயச் சூழ்நிலை வந்துள்ளதால் இவை எல்லாவற்றையும் செய்தியாளர்கள் முன்னிலையில் பகிரங்கப்படுத்துகிறேன்.

மதிமுகவை நான் குடும்பக் கட்சியாக மாற்றுகிறேன், எனது தம்பி ரவிச்சந்திரனுக்கும், மகனுக்கும் கட்சியில் முக்கியத்துவம் கொடுக்கிறேன் என்பது உண்மைக்குப் புறம்பான பொய்யான குற்றச்சாட்டுக்கள்.

எனது மகன் துரை வையாபுரியை கட்சியில் முன்னிலைப்படுத்துவதாக திட்டமிட்டு செய்தி கிளப்புகிறார்கள். இதேபோல ஆண்டன் பாலசிங்கத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக அவரை லண்டனுக்கு அனுப்பி வைத்துள்ளதாக செய்தி பரப்பினர். இதனால்தான் எனது நடைபயண்த்தின்போது அவரையும் கலந்து கொள்ளச் செய்து மக்களுக்கு அவர் இங்கேதான் இருக்கிறார் என்பதை நிரூபித்தேன்.

எனது மகன் இதுவரை தாயகத்திற்கு இரண்டு முறை மட்டுமே வந்துள்ளார். நான் அவரை எம்.பி. ஆக்கப் போவதாக கூறுகிறார்கள். அப்படி செய்ய நினைத்திருந்தால் நான் போட்டியிடாத சிவகாசி தொகுதியிலேயே நிறுத்தி எம்.பி. ஆக்கியிருப்பேனே? எந்தக் காலத்திலும் எனது மகனை நான் கட்சிக்குள் கொண்டு வரப் போவதில்லை, பதவியும் தரப் போவதில்லை.

அதேபோல எனது தம்பி ரவிச்சந்திரனும் பதவிக்கு ஆசைப்படாதவர். பத்து கிராம மக்கள் ஒன்று சேர்ந்து அவரை பஞ்சாயத்துத் தலைவர் பதவியில் வற்புறுத்தி அமர வைத்தனர்.

தற்போது மதிமுக புத்துண்ர்ச்சியுடன் சிலிர்த்தெழுந்துள்ளது. தொண்டர்கள் அனைவரும் கட்சியின் பின்னால் நிற்கிறார்கள். மொத்தம் உள்ள 36 மாவட்டச் செயலாளர்களில் 32 பேர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். 3 பேர் பல்வேறு காரண்ங்களினால் வர முடியவில்லை. ஆனால் கூட்டத்தின் முடிவுகளை ஏற்பதாக சம்மதம் தெரிவித்துள்ளனர். திருவாரூர் மாவட்டச் செயலாளர் தியாக பாரி மட்டுமே எந்தத் தகவலும் தரவில்லை.

அதேபோல உயர் நிலைக் குழுவில் உள்ளவர்களில் எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரனைத் தவிர மற்ற அனைவரும் வந்திருந்தனர். அரசியல் ஆலோசனைக் குழுவில் உள்ள 11 பேரில் 6 பேர் வந்திருந்தனர். அதேபோல அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் 7 பேரும் கலந்து கொண்டனர்.

என் மீது பழி சொன்னவர்கள் எங்கிருந்தாலும் வாழட்டும். இனிமேல் அவர்கள் சொல்லும் புகார்களுக்கு நான் பதில் சொல்லப் போவதில்லை என்றார் வைகோ.

கோவையில் ஜன௰ல் பொதுகுழு கூட்டம்

மேலும் அவர் பேசுகையில், சென்னையில் நடந்த உயர் நிலைக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து வரும் 28ம் தேதி ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல் வீரர்கள் கூட்டம் நடத்தப்பட்டு அதில் விளக்கிச் சொல்லப்படும். ஜனவரி 10ம் தேதி கோவையில் அவசர பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என்றார்.

எல்.கனேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் ஜனவரி 29ம் தேதி சேலத்தில் பொதுக் குழுவை கூட்டியுள்ள நிலையில் அவர்களை முந்திக் கொண்டு 10ம் தேதியே கோவையில் இக் கூட்டத்தை வைகோ கூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தி: thatstamil

0 Comments:

Post a Comment

<< Home