Sunday, December 31, 2006

வைகோ தொடர் குற்றச்சாட்டு: கண்க்கு காட்டுவாரா கருணாநிதி?

வைகோ தொடர் குற்றச்சாட்டு: கணக்கு காட்டுவாரா கருணாநிதி?

ம.தி.மு.க.,வின் நான்கு எம்.பி.,க்களை தங்கள் கணக்கில் காட்டி மத்திய அரசில் அமைச்சர் பதவியை தி.மு.க., பெற்றுள்ளது என்ற குற்றச்சாட்டை வைகோ தொடர்ந்து எழுப்பி வருகிறார். இதற்கு முதல்வர் கருணாநிதி பதில் கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ம.தி.மு.க.,வில் இருந்து வைகோவால் நீக்கப்பட்ட கணேசன் நிருபர்களுக்கு பேட்டியளிக்கும்போது, "தனக்கு மத்திய அமைச்சர் பதவி பெற்றுத் தருவதாகக் கூறி வைகோ துரோகம் செய்து விட்டார்; முதுகில் குத்தி விட்டார்' என்று தெரிவித்து இருந்தார். கணேசனின் இந்த குற்றச் சாட்டுக்கு பதில் அளித்து வைகோ கூறியதாவது:

மத்திய அமைச்சர் பதவி பெற்றுத் தருவதாக கூறி வைகோ என் முதுகில் குத்திவிட்டார் என்று முன்னாள் அவைத் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு வெளிப்படையான விளக்கம் அளிக்க வேண்டியது என் கடமை.

கட்சியின் தனித்தன்மையை காக்க வேண்டும் என்றால் மத்திய அமைச்சரவையில் சேரக்கூடாது என்று பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது வேறு எந்த தீர்மானத்திற்கும் கிடைக்காத அளவு பலத்த கைதட்டல் கிடைத்தது. இதன் பிறகு, தேர்தல் முடிந்ததும் "அமைச்சர் பதவி வேண்டும்' என கணேசன் என்னிடம் கேட்டார். "அது எப்படிங்க முடியும், கட்சி பொதுக்குழு தீர்மானம் இருக்கே'ன்னு நான் பதில் சொன்னேன். இருந்தாலும், இடைவிடாது தினமும் கேட்டு வந்தார். இடையில் செஞ்சி ராமச்சந்திரன் வந்து "எனக்கும் ஆசை உண்டு; ரெண்டு அமைச்சரா கேளுங்க'ன்னு சொன் நார். "சரி நான் பேசுகிறேன். ஆனால், பொதுக்குழுவைக் கூட்டி இந்த விஷயத்தில் முடிவெடுக்க எனக்கு அதிகாரம் பெற்றுக் கொண்டு முடிவெடுக் கலாம்' என்றேன். "எனக்குத் தெரியாத பொதுக்குழுவா'ன்னு கணேசன் கேட்டார். "அப்படியில்லீங்க... கட்சியின் இருதயம் போன்றது பொதுக்குழு. அதிலே ஒரு கொள்கை முடிவு எடுத்த நிலையிலே அதை மீற முடியாதே' என்று நான் சொன்னேன். "அதையும் மீறி நீங்க அமைச்சராகணும்னா கட்சியிலே எல்லா தலைவர்கள் கிட்டேயும் பேசி கன்வின்ஸ் பண்ணி ஒரு முடிவு எடுத்து அமைச்சர் பதவி பத்தி பேசறேன்' என்று கணேசனிடம் நான் சொன்னதும் உண்மைதான். அதன் படி பிரதமரிடம் பேசியதும் உண்மைதான்.

ம.தி.மு.க.,வும் அமைச்சரவையில் சேர கட்சியில் விரும்புறாங்கன்னு பிரதமரிடம் நான் சொன்னேன். அதற்கு பிரதமர் எந்த மறுப்பும் சொல்லாமல் ஒத்துக் கொண்டார். மூன்றாவது தடவை இந்த கோரிக்கையை சொன்னபோதுதான், "நீங்கள் (ம.தி.மு.க.,) அமைச்சரவையில் சேர வேண்டுமென்றால் தி.மு.க., தங்களது அமைச்சர்களை விலக்கிக் கொள்ள சொல்ல முடியுமா' என்று பிரதமர் என்னிடம் கேட்டார்.

எனக்கு அதிர்சியாய் இருந்தது. அவர்கள் எதற்கு விலக வேண்டும் என பிரதமரிடம் கேட்டேன். ."உங் கள் நான்கு எம். பி.,க்கள் கணக்கை சேர்த்து 20 எம். பி.,க் கள் கணக்கை காட்டி தி.மு.க., மத்திய அமைச்சர்களை பெற் றுள்ளது. தி.மு.க., வுக்குள் ம.தி.மு.க., ஒரு கூட்டணி வைத் துள்ளதாக சொல்லித்தான் தி.மு.க., அமைச்சர் பதவி வாங்கியதாக சோனியா என்னிடம் சொன் நார். நீங்கள் வேண்டுமானால் சோனியாவிடம் பேசுங்கள்' என்று பிரதமர் என்னிடம் சொன்னார்.

நான் சோனியாவைச் சந்தித்து கேட்டபோது, "ஆமாம், உண்மைதான்' என்று தெரிவித்தார். நான் அனைத்தையும் அவருக்கு விளக்கி விட்டு "இது பச்சை துரோகம்' என்று சொன்னேன். "இப்போது கருணாநிதியிடம் இது குறித்து நான் பேச முடியாது; இந்த விஷயத்தை நான் ஜீரணித்துக் கொள்கிறேன்' என்று சோனியா என்னிடம் அதிர்ச்சியாய் கூறினார். இந்த விஷயத்தை தமிழகம் எங்கும் தேர்தல் நேரத்தில் நூறு மேடையில் பேசினேன். அப்போது, "இது பொய். பிரதமரும், சோனியாவும் இதற்கு மறுப்பு தெரிவிப்பார்கள்' என்று தி.மு.க., தரப்பில் கூறினார்கள். ஆனால், தமிழகத்திற்கு பிரசாரத்திற்கு வந்த சோனியாவும், பிரதமரும் இந்த குற்றச்சாட்டை மறுக்கவில்லையே. அவர்கள் என்னிடம் சொன்னதைத் தான் நான் மக்களிடம் சொன்னேன். இதை எப்படி அவர்கள் மறுப் பார்கள்? மத்திய அமைச்சர் பதவி வாங்கித் தருவதாக நான் நம்ப வைத்து ஏமாற்றியதாக கணேசன் சொன்னதால்தான் நடந்த விஷயங்களை முழுமையாக உங்களிடம் சொல்ல வேண்டி வந்தது.

இவ்வாறு வைகோ தெரிவித்தார்.

ம.தி.மு.க., எம்.பி.,க்களை கணக்கு காட்டி தி.மு.க., அமைச்சர் பதவி பெற்றது என்ற வைகோவின் குற்றச்சாட்டு தொடரும் நிலையில் இதற்கு முதல்வர் கருணாநிதி பதில் அளித்து முற்றுப்புள்ளி வைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

செய்தி: தினமலர்

0 Comments:

Post a Comment

<< Home