Thursday, September 21, 2006

முல்லை பெரியாறு அணைக்காக போராடும் வைகோ

இந்தியாவின் நெற்கலஞ்சியமாக திகழ்ந்த தஞ்சையில் இன்று எலி கறி தான் உணவே! இந்த நிலையை நமக்கு ஏற்படுத்தியது கர்நாடக அரசு, காவிரி நதியில் அணை மேல் அணையாக கட்டி. பாலாற்றில்லும் அணை கட்ட போகிறது ஆந்திர அரசு. இந்நிலையில் கேரள அரசோ, முல்லை பெரியாறு அணையின் உயரத்தை வெறும் 6 அடி உயரம் கூட உயர்த்த மறுக்கிறது.

கேரளத்தை ஆளும் இடதுசாரிகளுடனும், ஆந்திரத்தை ஆளும் காங்கிரஸுடனும் கூட்டணி கொண்டுள்ள தி.மு.க. அவர்களை எதிர்த்து குறள் கொடுக்க தயங்குகிறது.

இந்நிலையில், மக்களுக்காகவே குறள் கொடுத்து, மக்களுக்காகவே மக்களோடு மக்களாக வாழும் வைகோ அவர்கள், கேரள அரசை கண்டித்து பேரணி நடத்தினார்.



இந்த பேரணியில் வைகோ அவர்களின் பேச்சு துளிகள்:
1. பெரியாறு அணையின் உரிமையை தமிழகத்திடம் 999 ஆண்டுகளுக்கு ஒப்படைத்து 1886ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 21ம் நாள், ஒரு ஒப்பந்தம் கையெளுத்தானது. அணையை பராமரிக்கும் உரிமமும், அணையின் பந்தோபஸ்து உரிமமும் தமிழக காவல்படையிடம் தான் இருந்தது. பின் காலப்போகில் அனைத்து உரிமையும் கேரள அரசுக்கு சென்றுவிட்டது.
2. அரபிக் கடலில் 2000 TMC மழை நீர் வீண்ணாக கலக்கிறது, தமிழகம் கேட்பதோ வெறும் 200 TMC நீர் தான். அதை கூட தர கேரள அரசு மறுக்கிற்து.
3. அட்சயபாத்திரம் போல கேரளத்துக்கு, காய்கறிகள், அரிசி, பால், மின்சாரம் என தமிழகம் தொடர்ந்து அளித்து வருகிறது, ஆனால் வீணாகும் நீரை கூட தமிழகத்துக்கு தர கேரள அரசு மறுத்து வருகிறது.



4. சிறந்த கம்யூனிஸ தலைவரான கேரள முதல்வர் அச்சுதானந்தன், சர்வதேச பார்வை கொண்ட அவர், பெரியாறு அணை பிரச்சணையில் பிராந்திய உணர்வோடு செயற்படுவது வேதனைக்குரியது. மாநில பற்று தேவைதான், அது இன்னொரு மாநிலத்துக்கு கேடாக மாறிவிட கூடாது.
5. தற்போது சட்டதிருத்தம் மூலம் கேரள அணைகளின் ஆணையத்திற்கு அதிகாரம் தரபட்டுள்ளது. இந்த அதிகாரம், உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தை விட மேலானதா என மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
6. தமிழக விவசாயிகளின் வாழ்வு பாழாகமல் இருக்க கூட்டணி அரசியலை கடந்து, உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரையை கேரள அரசு, அமல்படுத்தும் சூழலை, பிரதமர் மன்மோகன் சிங்கும், முதல்வர் கருணாநிதியும் உருவக்க வேண்டும்.



இந்த பேரணியில் அரசியல் பற்றி ஒரு வாக்கியமும் வைகோ பேசவில்லை என்பது கவனிக்க வேண்டும்.

பாலற்றில் அணைகட்டும் ஆந்திர அரசை கண்டித்தும் ஒரு பேரணியை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கலகம் சார்பில், வைகோ தலைமையில் நடத்த வேண்டும்.

கேரளத்திடமிருந்தும், கர்நாடகத்திடமிருந்தும், ஆந்திரத்திடமிருந்தும் நீரை பெற்று தர மத்திய அரசு முனைய வேண்டும்.
------
செய்தி, மற்றும் படங்கள் - தினமலர், தினதந்தி, தினமணி

0 Comments:

Post a Comment

<< Home