வைகோ.வின் நற்பணிகள்

ம.தி.மு.க.வின் அரசியல் பயணம்

இலவச மருத்துவ முகாம்

அவர் சிவகாசி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பொழுது, அவர் தொகுதியில் குழந்தைகழுக்கான மஞ்சள்-காமாலை தடுப்பு ஊசி போட முடிவு செய்திருந்தார். தி.மு.க, ஆ.தி.மு.க. போன்ற கட்சிகள் அமைப்பதை போல், ம.தி.மு.க. தொண்டர்களும் தனது, கட்சி பெயரையும், வைகோ, பெயரையும் கட்சி கொடியையும் வைத்து வளையம்(ஆர்ச்) அமைதிருந்தார்கள். தடுப்பு முகாம் துவங்கும் முந்தைய நாள், ஏற்பாடுகளை பார்வையிட வந்த வைகோ, அன்று இரவுக்குள் தனது பெயரையும், கட்சி கொடியையும் அகற்ற உத்தரவிட்டார் வைகோ. கட்டுபாடு மிகுந்த கட்சி அல்லவா... தொண்டர்களும் தலைவனின் கட்டளைக்கு கட்டுபட்டு, கட்சிசார்புடைய அனைத்தயும், இரவோடு இரவாக அகற்றினர். அதற்கு அவர் கூறிய காரணம் இதுதான் -- "குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர்கள் வேறு ஒரு கட்சியை சார்ந்தவர்களாக இருப்பார்களானால், இது இந்த கட்சியை சேர்ந்த நிகழ்ச்சி, இங்கு எப்படி செல்வது என்று தயக்கம் வரும். வருவதற்குத் தயங்குவார்கள். அனால் குழந்தைகளுக்கு கட்சி ஏது?" என்றார் வைகோ. கட்சி பாகுபாடின்றி, ஜாதிவேற்றுமை மறந்து, செஞ்சிலுவைச் சங்கங்கள் எவ்வாறு இயங்குகிறதோ அது போல, இயங்குவதே ம.தி.மு.க.
ஊனமுற்றோர் மறுவாழ்வு சிகிச்சை முகாம்
1999ஆம் ஆண்டு, ஊனமுற்றோருக்கான இலவச மறுவாழ்வு சிகிச்சை முகாம் நடத்தி, பல்வேரு சிகிச்சைகள் இலவசமாக செய்தார். அதிலும் கட்சி கொடி இல்லை! கட்சி பெயர் இல்லை! கட்சி தலைவர் பெயர் இல்லை! யோசித்து பாருங்கள், இதே இடத்தில் தி.மு.க. என்ன செய்திருக்கும்? அ.தி.மு.க. என்ன செய்திருக்கும்? பா.ம.க என்ன செய்திருக்கும்? (பா.ம.க சேவை என்று ஒன்று செய்தாலே, அது ஒரு மகத்தான சாதனை).
மறுமலர்ச்சி இரத்த தான கழகம்
இன்றும் அவர் மறுமலர்ச்சி இரத்த தான கழகதிலே 70,000'திற்கும் மேற்பட்ட

குளங்கள் சீரமைப்பு
2004ஆம் ஆண்டு, தனது கிராமத்தில் வரண்டு கிடந்த குலத்தில், தானே தனது சக ஊர்மக்களின் உதவியுடன் தூர்வாரி, ஆழப்படுதினார். வேரு எந்த அரசியல்வாதியும் செய்ய துனியாத செயல் அல்லவா அது. அவர் மற்றவர்களை போல் புகைபடம் எடுத்துகொண்டு, அந்த இடத்தை விட்டு செல்லவில்லை. சனி, ஞாயிறு இரண்டு நாலும், அங்கு இருந்து அந்த குலத்தை தூர்வாரினார். இது கண்டிப்பாக வாக்கு சேர்ப்பதற்காக செய்யவில்லை, ஏன் என்றால் தன் கிராம மக்கள் என்றும் வைகோ விற்கே வாக்களிப்பர். மேலும், இது மற்ற தொகுதியிலிருப்பர்க்கு, தெரியும் வாய்ப்பும் இல்லை. இந்த கிராம குலத்தை தூர்வாரியதினால் அவருக்கு, எந்தவொரு இலாபமும் கிடையாது. தன் கிராம மக்களுக்காக அவர் செய்த தன் நலமற்ற சேவை. இதை அவர் என்றும் தனது மேடை பேச்சில் கூறியது இல்லை, என்பது உங்களுக்கே தெரியும்.
கலவரம் செய்யா ஒரே கட்சி
இது அனைத்தயும் விட மிக பெரிய சாதனை என்று நான் கருதுவது, அவர் என்றுமே கலவரத்தை தூண்டியதே இல்லை, அவரது கட்சி தொண்டர்களும் கலவரம் செய்ததில்லை. இரானுவ கட்டுபாடுடன் இருப்பார்கள், அவரது கட்சி தொண்டர்கள். கலவரம் செய்ததில்லை! பேருந்தை கொளுத்தியது இல்லை! கடைகளை நொறுக்கியது இல்லை! சாலை மறியல் என்ற பெயரில் பொது மக்களை அல்லல் படுத்தியதில்லை!
ஜாதி, மத பேதமில்லைஅவர் என்றும் ஜாதி அரசியல் செய்தது இல்லை. 2001ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், வைகோவின் ஜாதியான 'கம்மவர் நாயுடு' (உயர் ஜாதி, FC) ஜாதியினர் தங்கள் ஜாதியை பிற்படுத்தபட (BC) ஜாதியாக அறிவிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து உண்ணாவிரதம் இருந்தனர். வைகோவும் அதே ஜாதி என்பதால் அவரையும் பங்குபெருமாறு வற்புருத்தியும், அவர் கலந்து கொண்டதில்லை. நான் ஜாதியை பயன்படுத்தி அரசியல் செய்ய மாட்டேன் என திட்டவட்டமாக கூறினார். இதற்கு கம்மவர் நாயுடு ஜாதி சங்கங்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும் அவர் தனது கொள்கையில் சமரசம் செய்ததேயில்லை. இதனால் பல வாக்கு வங்கியை அவர் இழந்தார், 2001 சட்டசபை தேர்தலில். உதாரணமாக, பூந்தமல்லி தொகுதியில் ம.தி.மு.க.வின் வேட்பாளர் அந்திரிதாஸ் அவர்களுக்கு போட்டியாக, தமிழ்நாடு கம்மவர் நாயுடு மகாஜன சங்கம் சார்பில் போட்டி வேட்பாளராக, ஆவடி வட்ட சங்க தலைவர் இராமய்யா நாயுடு போட்டியிட்டு, கணிசமான வாக்குகளை பிரித்தார். இது போல் பல தொகுதிகளில் வாக்குகல் பிரிந்ததாக கூரினர். ( நான் ஆவடியை சேர்ந்தவன் என்பதாலும் எனக்கு, இந்த தொகுதியில் இழந்த வாக்குகள் பற்றி எனக்கு நன்றாக தெரியும். மற்ற தொகுதி நிலவரம் எனக்கு சரியாக தெரியவில்லை. ) இன்று, சிறிய கட்சிகலான பா.ம.க, விடுதலை சிருத்தைகள் முதல் பெரிய கட்சிகளான பா.ஜ.க, தி.மு.க, காங்கிரஸ், உட்பட அனைத்து கட்சிகளும் ஜாதியையும், மதத்தையும் பயன்படுத்தி வாக்கு சேர்கும் அரசியல் வாழ்கையில் 'ஜாதிகள் இல்லையடி பாப்பா' என்ற பாரதியின் வரிகளையே நம்பி அரசியல் நடத்தும் வைகோ, செய்வது ஏனோ பலருக்கு தெரியவில்லை.
குடும்ப அரசியல் எதிர்ப்பு
இன்று வரை, தனது மகனை அரசியலில் ஈடுபடுத்தியது இல்லை. ம.தி.மு.க. துவங்கிய நாள் முதல் இன்று வரை, இனி மேலும் அவர் குடும்ப அரசியல் நடத்தமாட்டார். பா.ம.க. துவங்கிய போது, என்ன கூறினார், நமது 'மண்ணின் மைந்தர்' மருத்துவர் லார்டு லபக்கு (ராம)தாஸ், நினைவிற்க்கிறதா? நானோ, எனது கும்பத்தினரோ சட்டசபை உறுப்பினரகவோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினரகவோ பதவி வகித்தால், என்னை நடுரோட்டில் கட்டி வைத்து அடியுங்கள் என்றார். இன்று அவரது மகன் நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமல்ல, ஒரு அமைச்சர் பதவியே வகிக்கிறார். காங்கிரஸிலும் அதே நிலை தானே. தி.மு.க.வை பற்றி உங்களுக்கே தெரியும்.
ஊழலற்றவர்
பலமுறை நாடாளுமன்ற உருப்பினராக இருந்தும், அவர் இதுவரை எந்த ஊழலும் செய்யாமல், தன் தொகுதிக்காக எத்தனை செய்துள்ளார், அவர். வைகோ தி.மு.க.வில் இருந்த போதும் சரி, ம.தி.மு.க.வாக உறுவெடுத்த பின்பும், அவர் தனது சிவகாசி தொகுதியை முன்னேற்றி சிறப்பாக பணியாற்றினார் என்பது பலருக்கும் தெரியும்.
இதுபோல் பல நன்மைகளை செய்துள்ளார். எத்தனை நன்மைகள் செய்தாலும், நம் மக்கள், இன்றும் ஒரு சில செய்தித்தாள்களையும், தொலைகாட்சி செய்தியையும் வைதே தவறான கருத்தோடே வாழ்ந்து வருகின்றனர்.
கண்ணால் காண்பதும் பொய்,
காதால் கேட்பதும் பொய்,
தீர விசாரித்து அறிவதே மெய்
என்ற திராவிட கொள்கையின் ஒளிவிளக்கு, பகுத்தறிவு செம்மல், தந்தை பெரியாரின் வார்த்தயை அவர் வழி தோன்றல்களான 'தி.மு.க.'வும், 'ஆ.தி.மு.க'வுமே அழிக்கின்றன என்பதை நினைகும் பொழுது மிகவும் வருத்தமாக உள்ளது.
அழிந்து போன தமிழர் புகழும், தமிழர் பண்பாடும், தமிழகமும், தமிழர் வாழ்வும் மறுமலர்ச்சி பெரும் பொன்னாளுக்காக காத்து கிடக்கும்,
உங்கள் அன்பு சகோதரன்,
புதியதென்றல்.
1 Comments:
மதிபிற்குரிய சகோதரன் புதியதென்றல் அவர்களுக்கு,
நீங்கள் மேற் கூறிய அனைத்தும் உண்மையே. மதிபிற்குரிய மதிமுக பொது செயலாளர் வைகோ அவர்கள் இரத்த தான கழகம், ஊனமுற்றோர் மறுவாழ்வு சிகிச்சை முகாம், இலவச மருத்துவ முகாம், etc... இவை எல்லாம் தன்னுடைய விளம்பரத்திற்காக செய்யவில்லை மக்களின் நன்மைக்காக செய்தார் இவை அனைத்தும் தன்னுடைய சொந்த செலவில் செய்தார் மற்றவர்களை போல மக்களின் பணத்தில் கொள்ளையடித்து செய்யவில்லை,நான் நேரில் சென்று பார்த்தேன் அதுமட்டும் இல்லாமல் நானும் இலவச மருத்துவ முகாம் நடந்ததில் பங்குகொண்டேன் அதில் அவருடைய படம் மற்றும் அவருடைய கட்சி சின்னம் எதுவும் பொறிக்கப்படவில்லை இது உண்மை. அவர் ஒரு மறுமலர்ச்சி.
இப்படிக்கு,
உங்கள் சகோதரன்,
கிருஷ்ணகுமார் ராஜேந்திரன்
Post a Comment
<< Home